Vijay tv anchor dd divorce vijay

விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!

Latest News TV Establish DD Divorce : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாக பெருகி இருநதாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலமாகவும், மக்களின் வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று, ‘காபி வித் டிடி’. தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை திவ்ய தர்ஷினி என்கிற டிடி, 3 வருடங்களுக்கும் மேலாக தொகுத்து வழங்கி வந்தார்.

டாப் தொகுப்பாளினி டிடி..

இப்போது பல டிவி சேனல்களும், அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தாெகுத்து வழங்குவதற்கான தொகுப்பாளர்களும் பலர் வந்து விட்டனர். ஆனால், 90ஸ் குழந்தைகளின் செல்ல ஆங்கர்களுள் ஒருவராக இருப்பவர், திவ்ய தர்ஷினி. இன்றைய தொகுப்பாளர்களை போல வந்திருக்கும் திரை விருந்தினர்களை நொய் நாெய் என்று கேள்வி கேட்காமல், அவர்களை நகைப்பூட்டும் வகையிலும், நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக சுவாரஸ்யமாக்கும் வகையிலும் பல கேள்விகளை கேட்பார்.

இது பார்ப்பவர்களுக்கும் சரி, நிகழ்ச்சியில் இருப்பவர்களுக்கும் சரி என்ஜாய் செய்யும் வகையில் இருக்கும்.

திருமணமும் விவாகரத்தும்..

தொகுப்பாளினி டிடி, தான் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சேனலில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். இதனால், இவர் 2014ஆம் ஆண்டில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட போது அந்த திருமணத்தை திருவிழா போல கொண்டாடினர்.

3 நாட்கள் நடைப்பெற்ற இந்த திருமணத்தை, சேனலில் ஒளிபரப்பு செய்தும், டிடியை பிரத்யேகமாக பேட்டி எடுத்தும் ரசிகர்களை மகிழ்வித்தனர். திருமணம் முடிந்தும் தனது பணியை தொடர்ந்து செய்து காெண்டிருந்த டிடி, தனது துறையில் ஷைன் ஆகவும் செய்தார்.

Author judy brady autobiography samples

2017ஆம் ஆண்டு, தங்களின் மூன்று ஆண்டு திருமண வாழ்க்கை முடிவிற்கு வருவதாக அறிவித்தார், டிடி. இந்த செய்து திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இருந்தது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இணையதளத்தில் பல தவறான தகவல்கள் பரவினாலும், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் படிக்க | 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி!

தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

விவாகரத்து குறித்து பேச்சு..

டிடி, தனது விவாகரத்து குறித்து வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். விவாகரத்து, தனக்கு வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் அதை எப்போதும் தன் நினைவில் வைத்துக்கொள்வேன் என்றும் பேசியிருக்க்கிறார்.

மேலும், திருமண வாழ்க்கையும் தனக்கு சந்தோஷமாக இருந்ததாகவும், விவாகரத்திற்கு பிறகு தான் தாங்க முடியாத சோகத்தை உணர்ந்தது உண்மைதான் என்றும் கூறியிருக்கிறார். அதிலிருந்து மீண்டு வர, தான் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதாகவும் பேசியிருக்கிறார்.

விவாகரத்து செய்தி வந்த போது..

டிடி, தனது விவாகரத்து உறுதியானது என்ற செய்தியை அறிந்த போது, நடிகை ரம்யா கிருஷ்ணன் உடனான நேர்காணலுக்கு தயாராகி கொண்டிருந்தாராம்.

அப்போதுதான் தனது மனதிற்குள் எல்லாமே முடிந்து விட்டது என்ற உணர்வு தாேன்றியதாகவும் கூறியிருக்கிறார். மீடியாவில் இருப்பதால் தனது எதிர் தரப்பில் இருந்தவரை விட, இந்த விவாகரத்து தன்னை அதிகம் பாதிக்கும் என்று நினைத்ததாக அவர் பேசியிருக்கிறார்.

டிடிக்கு விவாகரத்தாகி ஏறத்தாழ 7 ஆண்டுகள் ஆகி விட்டது. விவாகரத்திற்கு பிறகு பெரிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த இவர், தன்னுடல் தாக்குநோய் (Autoimmune) ஏற்பட்டு, சில வருடங்கள் அவதிப்பட்டிருக்கிறார்.

இந்த நோயின் தாக்கத்தால், தன்னால் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேலாக நிற்க முடியாது என்றும், இதனால் பல நிகழ்ச்சிகள் தனது கை விட்டு போனதாகவும் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க | த்ரிஷாவுக்கே tough கொடுக்கும் பாட்டி! அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ